[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

புல்கூட முளைக்காத சூழலில் தாமரை மலர்ந்துவிடுமா?: மு.க.ஸ்டாலின்

mk-stalin-criticized-central-government-on-dam-issue

தமிழகத்தில் தண்ணீர் இல்லை; புல்கூட முளைக்காத சூழலில் தாமரை மலர்ந்துவிடுமா என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்தும் அனுமதியை உடனடியாக திரும்ப பெற கோரியும் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் திருச்சி உழவர் சந்தை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டன. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றன போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் ஏராளமான தொண்டர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், அரசியல் மற்றும் தேர்தலுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்றும் விவசாயிகளுக்காகவே போராடுவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்பதால் பிரதமர் மோடி தமிழகத்தை கண்டுகொள்ளவில்லை என்றும் ஸ்டாலின் விமர்சித்தார். பிரதமரின் செயல்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்ற ஸ்டாலின், தமிழகத்தில் தண்ணீர் இல்லை; புல்கூட முளைக்காத சூழலில் தாமரை மலர்ந்துவிடுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் திமுக அணியை பலவீனப்படுத்த முயற்சி நடைபெறுவதாக விடுதலை சிறுத்தைகள்கட்சி தலைவர் திருமாவளன் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காகவே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததாகவும், திமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close