[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மரங்கள் சாய்ந்தால் என்ன ? மீண்டும் பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் முயற்சி

a-ngo-as-replant-in-tiruvarur-after-gaja

கஜா புயலால் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்ததால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறியது கண்டு மீண்டும் சோலைவனமாக மாற்ற நாட்டு மரக்கன்றுகளை நடும் முயற்சியில் வனம் தன்னார்வ அமைப்பு ஈடுபட்டுள்ளது.

திருவாரூரில் வனம் தன்னார்வ அமைப்பு கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக கலைமணி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் மரக்கன்றுகளை 15 ஆண்டுகளாக நட்டு வருகிறார். இவருடன் பள்ளி மாணவர்கள் இதர தன்னார்வலர்கள் இணைந்து மரக்கன்றுகள் நடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு உள்ளதாக கலைமணி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் புயல் தாக்கியதை அடுத்து, டெல்டா மாவட்டமான திருவாரூர்,நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. இதனைக் கண்டு வேதனையடைந்த அந்த அமைப்புகள் மனம் தளராமல் தங்களது பணியை மீண்டும் தொடங்கியுள்ளனர். 

வனம் தன்னார்வ அமைப்பின் சார்பில் கடந்த 29ஆம் தேதி புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த பணியை தொடங்கியுள்ளனர். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதலில் மரக்கன்றுகளை முழுமையாக நட வேண்டும். மேலும் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற எண்ணத்தில் நான்கு மாவட்டங்களிலும் தொடர்ந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வனம் தன்னார்வ அமைப்புடன் இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் இதர தன்னார்வ அமைப்புகள் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டனர். 

குறிப்பாக வெளிநாட்டு மரங்களை அப்புறப்படுத்தி நாட்டு மரங்களாகிய அத்திமரம், ஆலமரம், அரசமரம், புங்கை மரம், போன்ற நாட்டு மரங்களை முழுமையாக நட்டு வருகின்றனர். விரைவில் பாலைவனமாக இருந்த இந்த டெல்டா மாவட்டங்களை சோலைவனமாக மாற்றுவதே எங்கள் எண்ணம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தகவல்கள் : ராஜசேகர் -  திருவாரூர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close