[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

லாரி, கார் மோதல் : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சோகம்

lorry-and-car-accident-in-near-tirupati-5-members-in-same-family-was-die

திருப்பதி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்‌. 

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ள எஸ்.கே தீனி கிராமத்தை சேர்ந்த கங்காதரம் குவைத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு சென்னை விமான நிலையம் வழியாக நாடு திரும்பினார். அவரை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல கங்காதரத்தின் மனைவி விஜயம்மா, சகோதரர் பிரசன்னா, அவரது மனைவி மாரியம்மா, பிரசன்னாவின் ஒன்றரை வயது மகன் ஆகியோர் சென்னை விமான நிலையம் சென்றனர்.

கங்காதரம் நாடு திரும்பிய நிலையில் மகிழ்ச்சியுடன் வரவேற்ற குடும்ப உறுப்பினர்கள் காரில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். ரேணிகுண்டா அருகே இருக்கும் மாமண்டூர் நெடுஞ்சாலை பகுதியில் அவர்களது காரும், எதிர்திசையில் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் அதில் இருந்த 5 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

தகவலறிந்த ரேணிகுண்டா காவல்துறையினர் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் சுமார் 2 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் ரேணிகுண்டா போக்குவரத்து காவல்துறையினர் நெரிசலை சீர் செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close