[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

மருத்துவரை கடத்த முயன்ற கும்பல் : மடக்கிப்பிடித்த மக்கள்

doctor-kidnapped-in-chennai-people-caught-the-kidnappers-and-hand-over-to-police

சென்னையில் தனியார் மருத்துவமணை மருத்துவரை கடத்த முயன்ற 3 பேரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை, சாலிகிராமத்தில் தனியார் மருத்துவமனை‌ ஒன்றினை, மருத்துவர்கள் கார்த்திகேயன், அகிலா தம்பதியினர் நடத்தி வருகின்றனர். கார்த்திகேயன் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது 3 பேர் கத்தியை காட்டி கடத்த முயன்றுள்ளனர். மருத்துவமனை மாடியிலிருந்து இதைக்கண்ட கார்த்திகேயனின் மனைவி அகிலா சத்தம்போட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்த மக்கள் மருத்துவர் கடத்தப்படுவதைக்கண்டு, மூவரையும் மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் விருகம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினரிடம் 3 பேரையும் மக்கள் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் மூவரும் புதுக்கோட்டையை சேர்ந்த லோகோபிராமன், சத்யா, செல்லதுரை என்பது தெரியவந்தது. இதற்கிடையே விசாரணையின் போது சத்யா, செல்லதுரை திடிரென தப்பியோடியுள்ளனர்.

அதுகுறித்து விருகம்பாக்கம் கா‌வல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கோடம்பாக்கத்தில் மருத்துவர் கார்த்திகேயன் சிகிச்சை அளித்த ஒரு குழந்தை இறந்து விட்டதால், பழிவாங்குவதற்காக ஆட்களை வைத்து கடத்த முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close