[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

இரண்டு நாளில் மத்தியக்குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு 

high-court-order-to-central-committee-for-submit-the-interim-report

கஜா புயல் சேதத்தை ஆய்வு செய்த மத்தியக்குழு 2 நாள்களில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான தென்னை, வாழை, முந்திர மரங்கள் வேரோடு மண்ணாக முறிந்து கிடக்கின்றன. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிப்புடன் நிற்கின்றனர். மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில் கஜா புயல்  சரி செய்ய தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது எனவும்  புயல் பாதித்த பகுதிகளில் மின் விநியோகம் செய்தது குறித்து மின்வாரியம் அறிக்கை அளிக்கவும் தேவையான அளவு நிவாரண முகாம்களை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை மாநில அரசிற்கு பிறப்பித்தனர்.

இதனைத்தொடர்ந்து புயல் சேதத்தை ஆய்வு செய்த மத்தியக்குழு 2 நாள்களில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. மேலும் மத்திய அரசின் நிபுணர் குழு ஆலோசித்து தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை வழங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் இடைக்கால அறிக்கையைத் அடிப்படையில் மத்திய அரசு உரிய எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து டிச.6 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது, மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close