[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

நீதிமன்ற வளாகத்தில் வெடித்த சொத்து பிரச்னை - மோதலில் 3 பேர் காயம்..!

clash-in-court-campus-3-injured

சொத்துப் பிரச்னை காரணமாக சேலம் நீதிமன்ற வளாகத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை‌ அடுத்த சாமிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் அய்யனார், பரமேஸ்வரன் மற்றும் தங்கவேலு. இவர்களுக்கு சொந்தமா‌ன 13 சென்ட் நிலத்தை பிரித்துக்கொள்வதில் தங்கவேலு தரப்புக்கும் மற்ற இருவருக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்தப் பிரச்சனைக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு காண சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு மூன்று தரப்பை சேர்ந்தவர்களும் வந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை 3-ஆம் தேதி வைத்துக் கொள்ளலாம் என வழக்கறிஞர் கூறியுள்ளார். அந்த நேரத்தில் தங்கவேல் அவரது மகன்கள் சுரேஷ், சர்கரவர்த்தி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் இருந்துள்ளனர். அப்போது அவர்களிடம் அய்யனார், பரமேஸ்வரன் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் கடுமையாக மோதிக் கொண்டதில் தங்கவேல், சுரேஷ், சர்கரவர்த்தி ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close