[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பைக்கில் சென்ற காவலரை தள்ளிவிட்ட ஆய்வா‌ளர் சஸ்பெண்ட் 

traffic-inspector-is-dismissed-for-attacking-the-police-in-signal

இருசக்கர வாகனத்தில் சென்ற காவலரை தள்ளிவிட்ட புகாரில் ஆய்வா‌ளர் ரவிச்சந்திரனை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையைத்தில் பணி புரியும் காவலர் தருமன். இவர் தனது தாயின் ஈமச்சடங்கில் பங்கேற்க கடந்த 21-ஆம் தேதி விடுப்பு கேட்டபோது ஆய்வாளர் ரவிச்சந்திரன் விடுப்பு தர மறுத்துள்ளார். இதனையடுத்து வாக்கி டாக்கி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தருமன் புகார் கூறினார். அதனைத்தொடர்ந்து அனுமதியின்றி அவர் விடுப்பு எடுத்து கொண்டார்.

Read Also -> பிளாஸ்டிக் தடை: துணி, பேப்பர் பைகளுக்கு மாறும் தமிழகம்! 

இதனையெடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வாக்கி டாக்கி மூலம் தருமன் புகார் கொடுத்ததால் கோபம் கொண்ட ஆய்வாளர் ரவிச்சந்திரன், காவலர் தருமன் வீட்டிற்கு போகும் வழியில் காத்திருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற தருமனின் கையைப் பிடித்து இழுத்துள்ளார் ஆய்வாளர் ரவிச்சந்திரன். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தருமனுக்கு பலத்த காயம் அடைந்தது. 

Read Also -> தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியது. மேலும் தருமன் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாக ஆய்வாளர் ரவிச்சந்திரன் குற்றம்சாட்டினார். இந்நிலையில் தருமனை, ஆய்வாளர் ரவிச்சந்திரன் கீழே தள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான காட்சிகளை வைத்து, இருவரிடமும் உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது தருமன் பணியிடை நீக்கம் செய்யப்படுவதற்கும் ரவிச்சந்திரன் காரணமாக இருந்துள்ளது தெரியவந்தது.

Read Also -> கஜாவில் கம்பீரம் காட்டிய பனை மரங்கள்!

இதனைதொடர்ந்து காவலர் தருமனின் மனைவி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தன்னுடைய கணவரை கொலை செய்யும் முயற்சியுடன் ஆய்வாளர் ரவிச்சந்திரன் செயல்பட்டுள்ளார் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதனிடையே ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். ஆயுதப்படைக்கு மாற்றம் செய்வதெல்லாம் ஒரு தண்டனையே இல்லை என்றும் பணி நீக்கம் செய்வதே சரியான தண்டனையாக இருக்குமென்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். 

Read Also -> மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராமுக்கு அபராதம் 

Related image

இந்நிலையில், துறை ரீதியிலான விசாரணைக்கு பின்னர், காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரனை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close