[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

புயலுக்கு சாய்ந்த 70 ஆண்டுகால அரச மரம்.. மீண்டும் அதே இடத்தில் நிறுத்திய ஓட்டுநர்கள்..!

tree-again-place-with-the-same-place

மணப்பாறையில் கஜா புயலால் சாய்ந்த 70 ஆண்டு கால அரசமரத்தை அந்த பகுதியை சேர்ந்த ஓட்டுநர்கள் மீண்டும் அதே இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மரம் மீண்டும் துளிர்த்து பயன் தரும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான தென்னை, வாழை, முந்திர மரங்கள் வேரோடு வேராக முறிந்து கிடக்கின்றன. புயலால் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியும் தொடர்கிறது. திருச்சி மாவட்டத்தையும் கஜா புயல் விட்டு வைக்கவில்லை. கஜா புயலின் தாக்கத்தினால் மணப்பாறை, கோவில்பட்டி சாலையில் தனியார் மோட்டார் வாகன ஓட்டுநர் சங்க நிலையத்தில் இருந்த அரச மரம் வேரோடு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் மீது சாய்ந்தது.

மரத்தை அகற்றத் தேவையான நடவடிக்கைககள் எடுக்கப்படாத நிலையில், தேசிய நெடுஞ்சாலையிடம் அனுமதி பெற்று மரத்தை மீண்டும் அதே இடத்தில் நிறுத்தி வைத்தனர் வாகன ஓட்டுநர்கள். கிளைகள் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் வைக்கப்பட்டுள்ள மரம் துளிர்த்துப் பயன்தரும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close