[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

புயலில் மூதாட்டி கால்முறிவு - அரசு மருத்துவமனையில் ஸ்கேன் செய்ய மறுப்பு

bribe-for-scan-in-the-government-hospital

கஜா புயலின் போது சுவர் இடிந்து விழுந்து கால் முறிவு ஏற்பட்ட மூதாட்டி ஒருவருக்கு ஸ்கேன் செய்ய பணம் இல்லாததால் மீண்டும் வீட்டிற்கே கொண்டுசென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெய்வாசல்பட்டி அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் 50ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கஜா புயலின் போது வீடு ஒன்றின் சுவர் இடிந்ததில் சாமியம்மா என்ற மூதாட்டியின் கால் முறிந்தது. அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது காலை ஸ்கேன் செய்ய அவரது உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்டதாகத் தெரிகிறது. புயல், மழையில் அனைத்தையும் இழந்து தவித்த சாமியம்மாவின் உறவினர்கள் வேறு வழியின்றி அவரை திரும்ப மழை பாதித்த அவரது வீட்டிற்கே கொண்டு வந்து விட்டனர்.

மருத்துவமனையில் முதலுதவியாக போடப்பட்ட கட்டுடன் வேதனையுடன், தனது வலியை வாய்திறந்து கூறமுடியாமல் படுத்த படுக்கையாக கிடக்கிறார் சாமியம்மா. சாமியம்மாவிற்கு ஸ்கேன் செய்ய பணம் கேட்கப்பட்டது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்த போது, அவரை மீண்டும் அழைத்து வந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும் எனவும் படுகாயமுற்றவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close