[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

“உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா 15 லட்சம்” - முதல்வர் அறிவிப்பு

cm-palanisamy-announced-financial-assistance

கஜா புயல் சீரமைப்பு பணியின் போது உயிரிழந்த மின்வாரிய பணியாளர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான தென்னை, வாழை, முந்திர மரங்கள் வேரோடு வேராக முறிந்து கிடக்கின்றன. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கின்றனர். மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி மழையும் பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய பணியாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15லட்சம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

சீரமைப்பு பணியின் போது உயிரிழந்த மின் ஊழியர்கள் சண்முகம் மற்றும் முருகேசன் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணியில் உள்ள மின் ஊழியர்களின் பணியை மெச்சத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். 24 ஆயிரத்து 941 ஊழியர்கள் மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 566 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close