[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம் 

maha-deepam-lit-on-the-mountain-peak-in-tiruvannamalai

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையிலுள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். கார்த்திகை விழாவின் போது மிகப்பெரிய கொப்பரையில் 24 முழ துணியை திரியாக வைத்து கற்பூர தூள் சேர்த்து சுருட்டப்படும். கொப்பரையில் நெய் வார்த்து இந்தச் சுடர் எரிக்கப்படுகிறது. இந்தச் சுடர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு எரியும். 60 கி.மீட்டர் தூரம் வரை இந்தச் சுடர் ஒளி தெளிவாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.  

                    

இந்த வருடம், திருவண்ணாமலை கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். விழாவின் ஆறாம் நாளான 19ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 20ஆம் தேதி பெரிய தேரோட்டமும் நடைபெற்றன. 

        

இதனையடுத்து, இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் கோயிலின் உள் பிரகாரத்தில் வலம் வந்து, உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உட்பட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

         

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு, அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண அருணாச்சலேஸ்வரர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். கொட்டும் மழையிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் திரண்டு வந்து மகா தீபத்தை கண்டு களித்தனர். அதேபோல், திருப்பரங்குன்றம், பழநி மலையிலும் தீபங்கள் ஏற்றப்பட்டன. 

           

அதேபோல், தமிழகம் முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close