[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

chance-for-heavy-rain-in-tamilnadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இதனால் டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சென்னையில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, போரூர், அண்ணாநகர், புரசைவாக்கம், அயனாவரம், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடர்கிறது. புயல் பாதித்த நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் , மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், உள்மாவட்டங்களில் 50 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close