[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்

எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

requesting-the-opposition-to-act-in-gaja-storm-rehabilitation-sp-velumani

கஜா புயல் சீரமைப்பு பணிகளில் அரசுடன் இணைந்து செயல்படுமாறு எதிர்க்கட்சிகளுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் சுருட்டிய மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும், நிதியுதவியும் வழங்கினார். பின்  “ஜீ பூம்பா என்று சொன்னவுடன் மின்கம்பங்களை நட்டுவிட முடியாது. புயலால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம் என்பதால் கணக்கிடும் பணி, நிவாரணப் பணி முடியவில்லை. புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகளை கொச்சைப்படுத்தக் கூடாது” என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.


இந்நிலையில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் அதிகமாக உள்ளது. சீரமைப்பு பணிகள் தீவரமாக நடைப்ற்று வருகிறது என்றார். மேலும் கஜா புயல் சீரமைப்பு பணிகளில் அரசுடன் இணைந்து செயல்படுமாறு எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.  


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close