[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

கஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..!

tn-governor-to-inspect-gaja-cyclone-affected-area

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்கிறார்.

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் சுருட்டிய மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும், நிதியுதவியும் வழங்கினார். தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களை ஆய்வு செய்ய முடியாமல் ஆய்வுப் பணிகளை பாதியிலேயே நிறுத்தினார்.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்கிறார். இதற்காக நாகை சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று நாகையிலும், நாளை திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் அவர் ஆய்வு செய்யவிருக்கிறார். இதன்பிறகு திருச்சியில் இருந்து விமானம் மூலம் ஆளுநர் சென்னை திரும்புகிறார். ஆளுநரை வரவேற்கும் அதிகாரிகள் மலர்கொத்து, புத்தகம், பரிசு‌ப்பொருட்களை தர வேண்டாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்ககது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close