[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

கொடைக்கானலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை 

holiday-for-tomorrow-schools-in-kodaikanal

கொடைக்கானலில் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார். நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

‘கஜா’ புயல், நாகை, தஞ்சை, திரு‌வாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களை புரட்டிப்போட்டுச் சென்றிருக்கிறது. கஜா புயல் நேற்று முன்தினம் அதிகாலை நாகை - வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதனால் நாகை, வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்குப்புக்கு உள்ளாகியுள்ளன. ’கஜா’ புயலால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து அப்பகுதியினர் வாடி வருகின்றனர்.

புயல் பாதித்த மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து மீட்புப் பணிகள் நடைப்பெற்று வருகிறது.குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்காக மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள கொடைக்கானலில் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார். நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close