[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...?” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்

gaja-cyclone-destroy-delta-district-including-nagai-tanjore

வீடு உள்ளிட்ட எத்தனையோ உடைமைகளை தாண்டி, தென்னை, வாழை என தாங்கள் வளர்த்த மரங்களை முற்றிலும் அழிந்து போனதை தாங்கிக் கொள்ள முடியாமல் டெல்டா மக்கள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“பெத்த பிள்ளையா வளர்த்த தென்னை எல்லாம் இப்படி பத்தையோடு சாஞ்சி கெடக்கே.. வாழவைத்த வாழைஎல்லாம் இப்படி வாரிக்கிட்டு போச்சே. இப்படி புயல் வந்து சோலையை பாலையா மாத்திடும் என்று கனவிலும் நான் காணவில்லையே” என வேதாரண்யம் விவசாயி ஒரு கூறியதை கேட்டால் எல்லோரது கண்களும் கலங்கிவிடும். 

         

நவம்பர் 15 ஆம் தேதி இரவு சுமார் 10 மணி வரை புயலின் தாக்கம் இந்த அளவிற்கு இருக்கும் என்று பெரும்பாலும் யாரும் கணிக்கவில்லை. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி விடிய, விடிய 100 கிமீ முதல் 120 கிமீ வரை புயல் காற்று தாண்டவம் ஆடியது. புயல் தொடங்கிய நேரத்தில் இருந்து வீட்டில், முகாமில் தஞ்சம் அடைந்த மக்கள் என்ன மனநிலையில் இருந்திருப்பால் என்று நினைத்தாலே இதயம் சற்று நடுங்குகிறது. 

 

நேற்று புயல் கரையை கடந்த பின்னர், காலையில் இருந்து தான் பாதிப்பு பற்றிய படங்கள் மெல்ல, மெல்ல வெளிவர தொடங்கியது. நேற்று காலை கூட இவ்வளவு சேதம் இருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். பின்னர்தான், வேதாரண்யம், நாகை பகுதிகளை கஜா கடுமையான முறையில் சூறையாடியது தெரிய வந்தது.

          

இதில், கொடுமை என்னவென்றால் தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் டெல்டா பகுதிகளில் எப்படியான பாதிப்பு இருந்தது என்று வெளியே தெரியவே நீண்ட நேரம் ஆகிவிட்டது. ஏற்கெனவே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், தொலைத்தொடர்பும் இல்லாமல் போனது அவர்களால் உதவிகளை கூட கேட்டுப் பெற முடியாத நிலை ஏற்பட்டது.

           

மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம், பேராவூரணி, வடகாடு பகுதிகளில் உள்ள மக்கள் தற்போது தான் தங்களது நிலையை வெளி உலகிற்கு எடுத்துச் சொல்லி வருகிறார். புயல் ஓய்ந்து 2 நாட்கள் ஆகியும் சில இடங்களில் அடிப்படை வசதிகள் கிடைக்காமல், உட்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.

டெல்டா மாவட்டங்களை தாண்டி புதுக்கோட்டை தொடங்கி திண்டுக்கல், கரூர், கொடைக்கானல் வரையும் கஜா தனது புயல் வேட்டையாயை நிகழ்த்தி சென்றிருக்கிறது. நாகை, தஞ்சை மாவட்டங்களை போல், புதுக்கோட்டை மாவட்டத்தையும் சேர்த்தே பலமாக அழித்து இருக்கிறது கஜா புயல். 

     

இரவு முழுவதும் புயல் காற்றின் அகோர சத்தத்தையும், இடி சத்தத்தையும் வீட்டுக்குள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருக்க மக்களுக்கு விடிந்த பின்னர், வெளிவந்து பார்த்த பின் தான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தான் வளர்த்த மரங்கள் எல்லோம் சாய்ந்து கிடப்பதை பார்த்து டெல்டா மக்கள் உறைந்தே போனார்கள். 

லட்சக்கணக்கான தென்னை மரங்கள் முற்றிலும் அடியோடு சாய்ந்தும், பாதி மரம் முறிந்த நிலையில் கிடந்துள்ளது. சாதாரண புயல் காற்றுக்கே தாங்காத வாழை மரங்கள் கஜாவை தாக்குபிடிக்குமா?. இதோ தேக்கு, தைலம் போன்ற நீண்ட கால பலன் தரும் உறுதிமிக்க மரங்களும் சாய்ந்துவிட்டன.

       

டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்ட பிறகு சிறுகுறு பயிர்களை விவசாயம் செய்து வந்தார்கள். கந்துவட்டிக்கு கடன் வாங்கி இந்த மாற்றுப் பயிர்களை விவசாயிகள் மேற்கொண்டு வந்த சில ஆண்டுகளிலே இப்படியொரு மிகப்பெரிய அடி அவர்களுக்கு விழுந்துள்ளது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்துள்ள நிலையில் அதனை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளிகள் வேலை இழந்துள்ளனர். 

               

கஜா புயலில் ஆடு, மாடு உள்ளிட்ட ஏராளமான கால்நடைகள் உயிரிழந்தது மிகவும் வேதனையான விஷயம் ஆகும். இவ்வளவு முன்னெச்சரிக்கை அறிவிப்புகளுக்கு பிறகு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆடு, மாடுகள் புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி இறந்து கிடக்கும் காட்சிகள் நம்மை உருக்குலைய வைத்துவிடுகிறது. இந்த கால்நடைகள் தான் சிறிய விவசாய குடும்பங்களின் முக்கியமான வாழ்வாதாரம். கஷ்ட காலங்களில் இந்த கால்நடைகளை விற்றுதான் வீட்டின் விஷேசங்களையே நடத்துவார்கள். பால் கொடுக்கும் மாடுகள் மிக முக்கியமான வாழ்வாதாரம். வாழ்வாதாரம் என்பதையும் தாண்டி தன்னோடு வளர்ந்த இந்த கால்நடைகளையும், ஓங்கி வளர்ந்த மரங்களையும் இழந்து விவசாயிகள் வாடிப் போயியிருக்கிறார்கள்.

             

சென்னையில் வர்தா புயல் வந்த போது, சன்னல் வழியாக அதனை பார்த்தவர்களுக்கு கஜா புயலின் தாக்கம் புரியும். இரண்டிலும் கிட்டதட்ட ஒரே அளவிலான வேகத்தில் காற்று வீசியிருக்கிறது. காங்கிரீட் கட்டிடங்களுக்கு நடுவே புயல் அடிக்கும் போதே அவ்வளவு சேதம் சென்னையில். சாலையில் திரும்பும் திசையெங்கும் அவ்வளவு மரங்கள் சாய்ந்து கிடந்தன. வர்தாவுக்கு பின் பூங்காங்களை பார்த்தவர்களுக்கு அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. நகரங்களிலே இந்த நிலை என்றால், மரங்கள், செடிகள், பயிர்கள் மட்டும் இருக்கும் கிராமங்களின் நிலையை எண்ணி பார்த்தாலே கண் கலங்கும்.

      

என்னை மீறி நீ ஒன்றுமே இல்லை என்பதை அடிக்கடி நிரூபணம் செய்துகொண்டே இருக்கிறது இயற்கை. இது வரை வந்த புயல்கள் அனைத்தையும் விட நாகை, வேதாரண்யம் பகுதிகளில் கோரமான விளைவுகளை உருவாக்கியுள்ளது கஜா. கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா  மாவட்டங்களில் மக்களுக்கு உதவுங்கள் என்று சமூக வலைதளங்களில் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. 

        

இந்த நேரத்தில் துரிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தான் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை சற்றே குறைக்கும். அதற்கு குறுகிய கால நீண்ட கால நடவடிக்கைகள் தேவை. வீடு கட்டித்தருவது, பாதிப்புக்கு இழப்பீடு தருவது போன்றவை நீண்ட கால நடவடிக்கை. உடனடியாக அத்தியாவசிய தேவைகளை கொண்டு சேர்க்க வேண்டும். வீடிழந்து தவிப்பவர்களுக்கு தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து தரப்பட வேண்டும். குடிநீர், உணவு, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

          

அரசு ஒருபுறம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், மற்றொரு புறம் அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் உதவிகளை செய்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பரப்பளவு பெரியது என்பதால், கடைக்கோடி கிராமம் வரை உதவியை தீவிரமான நடவடிக்கைகள் மூலம் எல்லோரும் சேர்ந்து கொண்டு சேர்க்க வேண்டும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close