[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

கொடைக்கானல் அருகே மண்ணுக்குள் புதைந்த 4 தொழிலாளர்கள்..!

4-workers-buried-inside-sand-near-kodaikkanal

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மண் சரிவில் சிக்கி கட்டுமானத் தொழிலாளர்கள் நான்கு பேர் மண்ணிற்குள் புதைந்தனர்.

சின்னப்பள்ளம் பகுதியில் தங்கி கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட ராஜேந்திரன், கார்த்தி, சவுந்தர் மற்றும் ரவி ஆகிய நான்கு பேரும் இரவு கூடாரத்தில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. கஜா புயலால் நேற்று கனமழை பெய்த நிலையில், மேல்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தோடு மண் சரிவு ஏற்பட்டதில், நான்கு பேரும் மண்ணில் புதைந்தனர். இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நிகழ்விடத்திற்குச் சென்ற மீட்புப் பணியினர், புதையுண்டுள்ள நான்கு பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மண்ணை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

கஜா புயலால் கொடைக்கானல் மலைப்பாதையில் மரங்களும், மின்கம்பங்களும் விழுந்தன. ஆங்காங்கே மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. அதனால், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றவர்கள் மலையிலிருந்து கீழே இறங்க முடியாத நிலை இருந்தது. சுற்றுலா சென்ற இடத்தில் மின்சாரம், குடிநீர், உணவு கிடைக்காமல் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், வத்தலகுண்டு சாலை இன்று சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close