[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

மூன்று மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை 

gaja-cyclone-leave-for-school-and-colleges-in-3-districts

‘கஜா’ புயல் காரணமாக திருவாரூர்,தேனி மற்றும் காரைக்கால் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் நிலைகொண்ட ‘கஜா’ புயல், பெ‌யருக்கு ஏற்றாற் போலவே யானை பலத்துடன் வந்து நாகை, தஞ்சை, திரு‌வாரூர் என 6 மாவட்டங்களை புரட்டிப்போட்டுச் சென்றிருக்கிறது. 110 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் 13,000 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.

சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களும் சாய்ந்திருக்கின்றன. இந்தக் கடுமையான புயலால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். ‘கஜா’ புயலினால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்ட பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரை வீடுகள் மற்றும் ஷீட் வீடுகளுக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

‘கஜா’ புயலால் மின்சாரம், சாலை வசதிகளை இழந்து மக்கள் தவிக்கின்றனர். எனவே அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனடியாகச் செய்துதர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தச் சுழலில் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ‘கஜா’ புயல்  காரணமாக திருவாரூர்,தேனி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close