[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வரிடம் ‘கஜா’பாதிப்பைக் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர்

central-home-minister-rajnath-singh-said-about-gaja-cyclone-situation-to-cm-palanisamy

‘கஜா’ புயல் சேதம் விபரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தார். 

தமிழகத்தை தாக்கிய ‘கஜா’ புயல் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் குடிசைப் பகுதிகள் அதிகம் இருக்கும் வேதாரண்யம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், வீடுகள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. 

இந்தக் கோரப் புயலால் இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர். தமிழக பேரிடர் மீட்புப் குழுவினர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதற்கிடையே ‘கஜா’ புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியிடம், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கஜா புயல் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், போர்க்கால அடிப்படையில் நடைபெறும் நிவாரணப் பணிகள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 471 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 82 ஆயிரம் பொதுமக்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதிகள் உட்பட செய்யப்பட்டு வரும் அனைத்து நிவாரணப் பணிகளை ராஜ்நாத் சிங் கேட்டறிந்ததாக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சேதமதிப்புகளை கணக்கிட்ட பின் மத்திய அரசிடம் அறிக்கை அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close