[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

கஜா புயல்.. வேளாங்கண்ணியில் பாதிப்பு

gaja-cyclone-damaged-in-velankanni

கஜா புயல் காரணமாக வேளாங்கண்ணியில் உள்ள ஆலயத்தில் சேதாரம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தை அச்சுறுத்திய கஜா புயல் இன்று காலையில் கரையை கடந்து தற்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. புயல் கரையை கடந்த நேரத்தில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கஜா புயலால் வீசிய காற்றில் தஞ்சையில் இருந்து , நீடாமங்கலம், திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி செல்லும் சாலையில் ஏராளமான மரங்கள் சாய்ந்தன.

இதனால் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் தஞ்சையிலேயே நிறுத்தப்பட்டன. இன்று காலை முதல் மதியம் வரை பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து 500க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கிளைகளை அகற்றினர். அந்த சாலையில் போக்குவரத்து சீரானதையடுத்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த வாகனங்கள் நாகைக்கு சென்றன.

இதனிடையே கஜா புயல் காரணமாக வேளாங்கண்ணியில் உள்ள ஆலயம் ஒன்றில் சேதாரம் ஏற்பட்டுள்ளது. ஆலயத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்துள்ளது. இது தவிர வேளாங்கண்ணியில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close