[X] Close
NEWS
Puthiyathalaimurai-logo
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

கஜா முழுமையாக கடக்க 1 மணி நேரம் ஆகும்!

gaja-storm-weaken-within-one-hour

கஜா புயல் முழுமையாக கரையை கடக்க, இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலின் கண்பகுதி நாகை வேதாரண்யம் இடையே முழுமையாக நள்ளிரவு 12.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கியது. இதன் காரண மாக நாகை, கடலூர், காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது புதுச்சேரியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

வேதாரண்யம், நாகை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் 100 முதல் 130 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அதிகாலை 2 மணியளவில் கஜா புயலின் கண் பகுதி கரையை கடந்த பின், காற்றின் வேகம் அதிகரித்தது. 

கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூரில் பெரும்பாலான பகுதிகளில் சூறைக்காற்றால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதே போல் மின்கம்பங்க ளும் சேதமடைந்தன. காரைக்காலில் மின்மாற்றி மீது மரம் சாய்ந்து விழுந்ததில் மின்மாற்றி வெடித்துச் சிதறியது. இதனால் 6 மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தொலைதொடர்பும் பாதிக்கப்பட்டது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 81‌ ஆயிரம் பேர் அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கஜா புயலின் முதல் பகுதி, கரையை கடந்துவிட்டது. முழுமையாக கரையை கடக்க, இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close