[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

”இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும்” - நாகை மாவட்ட சிறப்பு அதிகாரி

nagai-special-ias-officer-byte-to-puthiyathalaimurai

கஜா புயல் இரவு நேரத்தில் கரையை கடக்க இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்படும் என நாகை மாவட்ட சிறப்பு அதிகாரி ஜவகர்
ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார். 

கஜா புயல் இன்று மாலையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது
இன்று மாலை அல்லது இரவு நாகை அருகே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னைக்கு அருகே 370 கி.மீ தொலைவிலும் நாகைக்கு அருகே 370 கி.மீ தொலைவிலும் கஜா புயல் மையம் கொண்டிருப்பதாகவும் 6
மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது, மணிக்கு 8 கி.மீட்டரிலிருந்து
14 கி.மீட்டர் வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் நாகை மாவட்ட சிறப்பு அதிகாரி ஜவகர் ஐஏஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். 

அப்போது, நாகை மாவட்டத்தில் 37 இடங்கள் பாதிப்புக்குள்ளாகும் என இடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள 86 ஆயிரம் பேர்
பாதுகாப்பான இடத்திற்கு இன்று மதியத்திற்கு மேல் மாற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். 

ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை மதியத்திற்கு மேல் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம்
அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பாதுகாப்பு முகாம்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்
குறிப்பிட்டார். 

இரவு நேரத்தில் வேதாரணியம் பகுதியை புயல் கடக்க இருப்பதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் இரவு நேரத்தில்
மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு ஊழியர்கள் தயராக உள்ளதாகவும் ஜவகர் ஐ.ஏ.எஸ் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close