[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

நெருங்கும் கஜா புயல்! நாகை அருகே கரையை கடக்க வாய்ப்பு!

gaja-storm-landfall-between-pamban-and-cuddalore

கஜா புயல் இன்று மாலை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்திலும் கஜா புயல் உள்ளதாகவும், இன்று மாலை பாம்பன் மற்றும் கடலூர் பகுதிக்கு இடையே நாகை அருகே புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு நூறு கிலோ மீட்டரை தொடலாம் எனவும் கூறப்படுகிறது.

புயலினால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி மாநிலம் காரைக்கால், ஆகிய‌ பகுதிகளில் சேதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரை வீடுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் அலை ஒரு மீட்டருக்கும் மேல் உயரக்கூடும் என்பதால் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக‌ கூறப்படுகிறது.

இந்நிலையில் புயலினால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஓ.எஸ்‌.மணியன் தெரிவித்துள்ளார். கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close