[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

“ஆட்டுமந்தைகள்தான் கூட்டமாக வரும்” - காங்கிரசை விமர்சித்த தமிழிசை

tamilnadu-bjb-leader-tamilisai-comment-about-congress-alliance

ஆட்டுமந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சிங்கத்தைவிட பலமானதா ? என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவை தேர்தல் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன. அதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை அமைத்து வருகின்றன. குறிப்பாக பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைப்பாளர் போல செயல்பட்டு, எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து வருகிறார். அதேசமயம் கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கடந்த சில மாதங்களாக சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். 

அண்மையில் சந்திரபாபு நாயுடு சென்னை வந்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துச் சென்றார். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சென்னை வந்து ஸ்டாலினை சந்தித்துள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடர்பாக ட்விட்டரில் சாடியுள்ள தமிழிசை, “ஆட்டுமந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சிங்கத்தைவிட பலமானதா ?” என விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பியபோது, பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால், அதில் யார் பலசாளி ? அந்த ஒருவர் தானே ! என அவர் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close