[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

கஜா புயல் எச்சரிக்கை... பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

kaja-cyclone-leave-for-school-and-colleges-in-4-districts

கஜா புயல் எச்சரிக்கை காரணமாக 5 மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல், கடலூர்- பாம்பன் இடையே நாளை மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலினால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய‌ பகுதிகளில் சேதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரை வீடுகள் மற்றும் ஷீட் வீடுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கஜா புயல் எச்சரிக்கை காரணமாக திருவாரூர், ராமநாதபுரம், கடலூர், நாகை , புதுக்கோட்டை  ஆகிய 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுளளது. புயல் நாளை கரையைக் கடக்கவுள்ள சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதேபோல புதுச்சேரியின் காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close