[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

குதிரை எட்டி உதைத்ததில் காவலருக்கு கண்பார்வை பறிபோனது..!

police-suffered-due-to-horse-attack

குதிரை எட்டி உதைத்ததில் காவலருக்கு கண் பார்வை பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் காவலர் மணிகண்டன் (வயது 27). இவர் சென்னை ஆயுதப்படை குதிரை பயிற்சி மைதானத்தில் குதிரைகளுக்கு பயிற்சியும் வழங்குவார். அப்படித்தான் நேற்று குதிரைகளுக்கு பயிற்சி அளித்தபோது திடீரென குதிரை ஒன்று மணிகண்டனை எட்டி உதைத்தது. இதில் மணிகண்டனின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. உடனே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பிறகு மணிகண்டன் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையில், இடது கண்ணில் மணிகண்டனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் மணிகண்டனின் இடது கண் பார்வை பறிபோனது. அவருக்கு இடது பக்க தாடையும் உடைந்துள்ளதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 01.10.2013-ஆம் தேதி முதல் குதிரைப்படையில் மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close