[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

“கழிவறை திட்டத்தில் 1,57,000 கழிவறைகள்” - திருவள்ளூர் ஆட்சியர் தகவல்

1-50-lakhs-toilet-build-thiruvallur-collector-announced

திருவள்ளூர் மாவட்டத்தில் தனி நபர் கழிவறை திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரம் கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதா‌க ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். 

உலக கழிவறை தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில், ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் திறந்த வெளி மலம் கழிக்கும் பழக்கத்தை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட ஆட்சியர், வீடு வீடாக சென்று நேரில் கழிவறைகளை ஆய்வு செய்தார். தூய்மையாக உள்ளதா? டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகக் கூடிய வகையில் நீர் தேங்கியிருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய்கள், சுகாதார சீர்கேடு, எதிர்கால பாதிப்புகள் குறித்து விளக்கிக் கூறினார். 

பின்னர் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து அனைவரும் தனி நபர் கழிவறை கட்டுவோம், சுகாதாரத்தை பேணிக் காப்போம் என ஆட்சியரை பின் தொடர்ந்து கிராம மக்கள் உறுதி மொழி ஏற்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை தனிநபர் கழிவறை திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 25 ஆயிரத்து 300 நபர்கள் விண்ணப்பித்திருந்தாகவும், அதில் முறையாக பட்டா உடையவர்கள், நீர்நிலையில் இல்லாதவர்கள் என தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரம் கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது எனவும் ஆட்சியர் தெரிவித்தார். 

மற்ற நபர்களுக்கும் விரைவில் கழிவறை கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திருவள்ளூர் மாவட்டத்தை பொது இடங்களில் மலம் ஜலம் கழிக்காத மாவட்டமாக மாற்ற பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close