[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

"செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகப்படியான நீர் திறக்கப்படவில்லை": ஒ.பன்னீர்செல்வம் விளக்கம்

tn-minister-o-paneerselvam-clarifies-on-water-release-from-chembarambakkam-lake

எதிர்க்கட்சிகள் கூறுவது போல, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகப்படியான நீர் திறந்து விடப்படவில்லை என்று பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய அவர், பலத்த மழை பெய்தபோதும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகபட்சமாக 29 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டதாகத் தெரிவித்தார். செம்பரம்பாக்கம் ஏரி பாசன ஏரியல்ல என்று கூறிய அவர், அதில் நீரைத் திறக்க முதலமைச்சரின் அனுமதி தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

அந்த ஏரியில் விதிமுறைப்படி 2 அடி குறைவாகவே நீர் தேக்கப்பட்டிருந்ததாகவும், அதிகபட்சமாக 33 ஆயிரம் கன அடி மட்டுமே ஏரியில் இருந்து நீர் திறக்க முடியும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் விளக்கமளித்தார்.

ஏரி நிரம்பியதால், நீர் திறப்பு குறித்து டிசம்பர் ஒன்றாம் தேதி புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டதாகக் கூறிய அவர், தேர்தலை மனதில் கொண்டு எதிர்க் கட்சிகள் தவறான குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்துவதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close