[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

சென்னை மெரினா கடற்கரையில் அரை நிர்வாணத்தில் பெண் சடலம் 

woman-s-half-naked-body-found-on-marina-sands

சென்னை மெரினா கடற்கரையில் அரைநிர்வாண கோணத்தில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நீச்சல் குளம் அருகே நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை அரைநிர்வாண கோணத்தில் போலீசார் மீட்டுள்ளனர். பெண்ணின் உடலில் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் வெளிவந்துள்ள தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை காலையில் வழக்கம் போல் பலர் மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி சென்றுள்ளனர். சென்னை மாநகராட்சியின் நீச்சல் குளம் அருகே பெண்ணின் உடைகளை நாய்கள் கிழித்து எடுத்து வந்துள்ளன. சந்தேகம் அடைந்த நடைப்பயிற்சி சென்றவர்கள் அருகில் சென்று பார்த்த போது அங்கு அரை நிர்வாண கோணத்தில் பெண்ணின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உடனடியாக அண்ணா சதுக்கம் காவல்துறையினருக்கும்  தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். உடல் அருகே செல்போன் ஒன்றையும் காவல்துறையினர் மீட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பேசிய காவல்துறையினர் ''கொலை செய்யப்பட்டதாக சந்தேகப்படக்கூடிய பெண் பாலியல் தொழிலாளியாக இருந்துள்ளார் என்றும், கடைசியாக அவர் 4 ஆட்டோ ஓட்டுநர்களுடன் நீச்சல் குளம் அருகே வந்துள்ளார்'' என்றும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிறப்புப்படை அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்தக் குறிப்பிட்ட இடத்தில் சிசிடிவி ஏதும் இல்லாத காரணத்தினால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மெரினா கடற்கரை வணிகர்கள், 'கடந்த 6 மாதங்களாக இரவு நேரத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், குறைவான மின்விளக்குகளே அதற்கு காரணம் என்றும், இருள் பகுதியை பாலியல் தொழிலாளிகளும்,  குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் பயன்படுத்தி கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். அதனால் மின் விளக்குகளை அமைத்தும் காவல்துறையினரின் ரோந்து பணிகளை  அதிகப்படுத்தியும் குற்றச்சம்பவங்களை குறைக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close