[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

ஒயிலாட்டம் ஆடிய அதிமுக அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ !

mla-arukutty-and-minister-sp-velumani-are-dance-with-people-in-kovai

கோவை மாவட்டம் மக்களுடன் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுகுட்டி மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நடனமாடினார். 


கோவை அடுத்துள்ள காளப்பட்டியில் கோவில் குடமுழுக்கு விழாவில் தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். பின் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியும், உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் ஆடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

உற்சாகமாக அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டமாடியதால் அதிமுகவினர் மகிழ்ச்சியடைந்தனர். கோவில் குடமுழுக்கு விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் அமைச்சரின் நடனத்தை கண்டு ரசித்தனர்‌.இதில் உற்சாக மிகுதியில் அவர்களுடன் சேர்ந்து அதிமுகாவினர் சிலரும் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close