[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

தடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை !

6-months-imprisonment-if-the-timing-for-broke-out-firecrackers-on-diwali

தீபாவளியன்று தடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி மற்றும் ஆசோக் பூஷன் அமர்வு, தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரையில் மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த அவகாசத்தை தளர்த்தக்கோரி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பட்டாசு வெடிக்க இரவு 2 மணிநேரம் மட்டும் அனுமதி என்ற உத்தரவில் திருத்தம்கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கவேண்டும். அது எந்த நேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு, அரசு குறிப்பிட்டுள்ள 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் 188இன் கீழ், 1 முதல் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 200 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த காவல்துறை தரப்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே கம்பி மத்தாப்பு, ராக்கெட் போன்ற பட்டாசுகளை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என வெளியான தகவலை தீயணைப்புத்துறை மறுத்துள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடு அனைத்துவகை பட்டாசுகளுக்கும் பொருந்தும் என தீயணைப்புத்துறை விளக்கமளித்துள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close