[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 36 பேர் படுகாயம்

cuddalore-carrying-around-70-passengers-met-with-an-accident

கடலூரில் அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 36 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

70 பயணிகளை கொண்ட அரசு பேருந்து ஒன்று கோயம்புத்தூரில் இருந்து தள்ளூருக்கு சென்று கொண்டிருந்தது. நீலகிரி மாவட்டம் நடுங்கனி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென இருச்சக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்துள்ளது. 

சுதாரித்து கொண்ட பேருந்து ஓட்டுநர் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்படாமல் இருக்க பேருந்தை இடது புறம் வளைத்துள்ளார். ஆனால் நிலைத்தடுமாறி பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

இதில் பேருந்தில் பயணம் செய்த 70 பேரில் 36 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் 26 பேர் பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பேருந்து ஓட்டியவர் கடலூரை சேர்ந்த ஜெகநாதன் என்பதும் இருச்சக்கர வாகனத்தில் வந்தவர் சந்திரமோகன் என்பதும் தெரியவந்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close