[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

“உண்மைக்கு புறம்பான அறிக்கையை வெளியிடுகிறார் துரைமுருகன்”- ஜெயக்குமார் கண்டனம்

minister-jayakumar-condemn-to-durai-murugan

புதிய தலைமைச் செயலக கட்டட ஊழல் வழக்கினை திசை திருப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் உண்மைக்கு புறம்பான அறிக்கையை வெளியிடுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணா நீரைத்தேக்கி வைக்க தனியார் நிலம் கையகப்படுத்தாததால் நீர்த்தேக்கம் அமையாமல் 186 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டதாக துரைமுருகன் ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டிருப்பதாக கூறியுள்ளார். தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 100 சதவிகிதம் முடிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் 65 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சில அணைகள் சேதமடைந்து பின்னர் அவை சரிசெய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இயற்கை சீற்றங்களின் காரணமாக சில தருணங்களில் நீர்தேக்க கட்டுமானங்களில் பாதிப்பு ஏற்படுவதாகவும் பின்னர் காரணம் கண்டறியப்பட்டு சீர் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சியின் தவறுகளை மறைக்க முற்றிலும் உண்மைக்கு புறம்பான அறிக்கையை துரைமுருகன் வெளியிட்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close