[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

தீபாவளி... திரையரங்குகளில் கூடுதல் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

tn-govt-allowed-special-shows-in-theaters

தீபாவளி நாள் மட்டுமின்றி நவம்பர் 7,8,9 ஆகிய தேதிகளிலும் திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தீபாவளி நவம்பர் 6-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் தியேட்டர்களுக்கு செல்வார்கள். சிலர் குடும்பமாகவே, சிலர் நண்பர்களுடனோ சென்று புதிய படங்களை பார்ப்பார்கள். இதனால் டிக்கெட் கிடைக்காமல் பலர் சிரமப்படுவது உண்டு. இதனையடுத்து தீபாவளிக்கு மட்டும் மேலும் ஒரு சிறப்பு காட்சி திரையிட ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தீபாவளி மட்டுமின்றி  நவம்பர் 7,8,9 ஆகிய தேதிகளிலும் திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு திரைப்பட விநியோகிஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் தியேட்டர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close