[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து

madras-high-court-quashes-criminal-prosecution-against-p-chidambaram-s-kin-on-black-money-case

கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது அவரின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கியதாகவும் இதனை வருமானவரி கணக்கில் காட்டவில்லை என்றும் புகார் எழுந்தது. இதனையடுத்து 3 பேர் மீதும் கறுப்புப்பண தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி வருமான வரித்துறையினர் நீதிமன்றத்தில் புகார் பதிவு செய்தனர். வருமான வரித்துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு தடை கோரி  கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

 தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அமர்வு முன் மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் கறுப்புப்பண தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறப்பு நீதிமன்றம் அமைக்காத நிலையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. புகாரானது வழக்காக மாறுவதற்கு முன்பாகவே இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்திருந்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட3 பேர் மீதான வருமான வரித்துறையின் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close