[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

எப்போது பட்டாசு வெடிக்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு

tamilnadu-government-modifies-timing-for-bursting-firecrackers-on-diwali

தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீபாவளியின் போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த அவகாசத்தை தளர்த்தக் கோரி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பட்டாசு வெடிக்க இரவு 2 மணிநேரம் மட்டும் அனுமதி என்ற உத்தரவில் திருத்தம் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

Read Also -> 'ஜெ.பேனர் கிழிப்பு; ஸ்டாலின் பேனருக்கு பாதுகாப்பு' - டிடிவியை சாடிய ‘நமது அம்மா’ நாளேடு  

 

இரவில் வெடிப்பது வடமாநிலத்தவர் வழக்கம் என்றும், தமிழகத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை பட்டாசு வெடிக்க கூடுதலாக அவகாசம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தமிழர்களின் கலாசாரம் சார்ந்த விஷயம் என்றும், கலாசாரத்திற்கு மதிப்பளித்து, காலையில் 2 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கும் வகையில் தீர்ப்பில் திருத்தம் தர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தீபாவளி என்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கவேண்டும், அதற்கு மேல் வெடிக்கக் கூடாது என்பதில் நீதிமன்றம் தீவிரமாக உள்ளது. அது எந்த நேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம்’ என்று உத்தரவிட்டது. 

Read Also -> அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி : சோதனையின்போதே இறந்த அதிகாரி

இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு தெரிவித்துள்ளது. தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடிகளை தவிர்க்கலாம் என்றும், மருத்துவமனைகள் வழிபாட்டுதளங்களின் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கலாம் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close