[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

தொடர் கனமழை : நாகை, புதுக்கோட்டையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை

continuously-heavy-rain-schools-holiday-announced-in-nagai-and-pudukottai-by-district-collectors

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்தமிழகம், தெற்கு கேரளா, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மழை தொடங்கியதாக தெரிவித்தார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது என்று கூறிய அவர் இன்றும், நாளையும் மழை நீடிக்கும் எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முழுவதும் பல இடங்களில் தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை தொடர்வதால், அங்கு பணிக்கு செல்வோர் மற்றும் கல்வி நிலையங்கள் செல்லும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால்  திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் புதுக்கோட்டையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய விடுமுறையால் மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close