[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

சாதித்துகாட்டிய இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் தமிழ்ச்செல்வி

india-s-first-trans-gent-nurse-in-tamilnadu-and-her-name-tamilselvi

விடாமுயற்சியுடன் போராடி வெற்றி பெற்று இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியராக பெருமை பெற்றுள்ளார் தமிழ்ச்செல்வி.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருநங்கை தமிழ்ச்செல்வி. இவர் 2 ஆண்டுகள் போராட்டத்திற்குப்பிறகு செவிலியர் படிப்பில் இடம் பெற்ற திருநங்கை என்ற சாதனையை சொந்தமாக்கியுள்ளார். திருநங்கை என்று சிறுமைப்படுத்தியவர்களை தனது மதிப்பெண்களால் அலட்சியப்படுத்தியவர். செவிலியர் கனவுடன் இருந்தவருக்கு, திருநங்கைகளுக்கு நர்சிங் படிக்க அனுமதி இல்லை என்ற சட்டம் தடையாக வந்தது. தனது கனவை‌ துரத்த அரசு அலுவலக படிகளை ஏறியவருக்கு கிடைத்தது ஏமாற்றமே. 

இதையடுத்து மருத்துவக்கல்வி இயக்கங்கள் தேர்வு குழு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்த தமிழ்ச்செல்வியின் வழக்கை, மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது. மேலும் நர்சிங் படிப்பில் சேர உத்தரவு பிறப்பித்து தீர்ப்பளித்து. இதன்மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை நர்சிங் மாணவி என்ற பெருமையை தமிழ்ச்செல்வி பெற்றுள்ளார். பெற்றோரின் அரவணைப்பு, திருநங்கைகளை வாழ்வில் சாதனையாளர்களாக மாற்றும் என்கிறார் தமிழ்ச்செல்வியின் தாய் அமுதா. 

மருத்துவத்துறையில் சேர்ந்துள்ள தமிழ்ச்செல்வி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ‌இருப்பார் என்கிறார் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர். கொண்ட லட்சியத்தை நிறைவேற்ற மன உறுதியுடன் போராடினால், சாதனைகள் எட்டிவிடும் தூரம்தான் என்பதை காட்டுகிறது தமிழ்ச்செல்வியின் முயற்சி. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close