[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

தம்பிதுரையுடன் வாக்குவாதம் செய்த இளைஞர் - கூட்டத்தில் சலசலப்பு

a-youngster-argue-with-deputy-speaker-thambidurai-in-karur

பொதுமக்களிடம் மனுக்கள் வாங்க சென்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

மக்களவை துணை சபாநாயகர் இன்று கரூர் அருகில் உள்ள தாளியாம்பட்டி என்ற கிராமத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெறுவதற்காக சென்றார். அப்போது, அங்கு இருந்த இளைஞர் ஒருவர் ‘4 வருடத்துக்குப் பிறகு இப்பதான் எம்பி வந்திருக்கிறார்’ என நேரடியாக அவரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத தம்பிதுரை, ‘நீ எனக்கு ஓட்டு போடாட்டியும் பரவாயில்லை. என்னோட தொகுதியில் 30 ஆயிரம் கிராமம் இருக்கு. ஒவ்வொரு கிராமத்துக்கு போகனும்னா 5 வருசம் ஆகும். நான் வரவில்லையென்றாலும் வேலை நடக்குதல்ல” என இளைஞரை மடக்கி கேள்வி கேட்டார். 

அத்துடன், “சாக்கடை, குடிநீர் பிரச்னைகள் எல்லாம் கவுன்சிலர் பார்க்க வேண்டியது. ஆனா,, நான் வந்து பார்க்கிறேன்” என பேசினார். மேலும் எம்பி வரலைன்னு போற இடத்துல எல்லாம் கேட்டு சலிச்சு போச்சு என்றும் தம்பிதுரை விரக்தியுடன் பேசினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிலரும் தம்பிதுரையுடன் உரையாட, அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close