[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

தீபாவளியன்று தமிழகத்தில் வெடி வெடிக்கும் நேரம் மாற்றப்படலாம்..!

crackers-burst-time-may-be-change-in-tamilnadu

தீபாவளியன்று தமிழகத்தில் வெடி வெடிப்பதற்கான நேரம் மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக கூறி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீபாவளியின் போது இரவு 8 மணி முதல் 10 மணி வரையில் மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனிடையே பட்டாசு வெடிக்கப்பட்ட விதிக்கப்பட்ட 2 மணி நேரம் என்ற அவகாசத்தை தளர்த்தக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், இரவில் பட்டாசு வெடிப்பது வடமாநிலத்தவர் வழக்கம் என்றும், தமிழகத்தில் அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க கூடுதலாக அவகாசம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் கோரிக்கையை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் வெடி வெடிப்பதற்கான நேரம் மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close