[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

வடகிழக்கு பருவமழை அறிகுறியா..? சென்னையில் விட்டு விட்டு மழை

rain-in-chennai-today

வடகிழக்கு பருவமழையின் அறிகுறியாக சென்னையில் விட்டு விட்டு மழை தொடர்கிறது. 

Read Also -> ‘அத்தை’ எனக் கூறி பள்ளியிலிருந்து சிறுவன் கடத்தல்.. 10 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..!  

நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பருவமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Also -> என்ஜின் இல்லாத இந்தியாவின் அதிவேக ரயில்..! சென்னையில் அறிமுகம்..! 

இந்நிலையில் சென்னையில் இன்று காலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, மேற்கு மாம்பலம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்கிறது. சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், புழல், செங்குன்றம், ரெட்டேரி, மாதவரம், சோழவரம், பொன்னேரியில் லேசான மழை பெய்தது. இந்த மழை வடகிழக்கு பருவமழையின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் எண்ணுர், கேளம்பாக்கம், மகாபலிபுரம், தரமணி பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Read Also -> “இளைஞரின் கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால்?” - நடிகர் சிவகுமார் விளக்கம்

இதனிடையே, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் குறித்த மீன்வளத்துறையின் அறிவிப்பு காரணமாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை‌.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close