[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு
  • BREAKING-NEWS ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி- டெல்லியில் விடியவிடிய போராட்டம்
  • BREAKING-NEWS 'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி
  • BREAKING-NEWS ஏ.எம்.யூ. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை: ஜன. 5 வரை கல்லூரி மூடல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்

“இளைஞரின் கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால்?” - நடிகர் சிவகுமார் விளக்கம் 

veteran-actor-sivakumar-explained-about-he-knocked-a-phone-phone-off-his-fan-s-hand

பாதுகாப்பையும் மீறி செல்ஃபி எடுத்த இளைஞரின் கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால்? என்று நடிகர் சிவகுமார் விளக்கம் 
 அளித்துள்ளார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் நடிகர் சிவகுமார் இன்று கலந்து கொண்டனர். அப்போது சிவகுமாரை காணவந்த ரசிகர்கள் செல்ஃபி எடுத்தனர். அப்போது செல்ஃபி எடுத்த ஒரு இளைஞரின் செல்போனை சிவகுமார் படாரென தட்டிவிட்டார். இதில் அந்த இளைஞரின் செல்போன் உடைந்து சிதறியது. சட்டென்று நடைபெற்ற இந்த நிகழ்வால் அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்தார். சிவகுமார் செல்போனை தட்டிவிட்ட வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

                    

இந்நிலையில், இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட விவகாரம் தொடர்பாக பேசிய நடிகர் சிவகுமார், எல்லோரையும் போல் தானும் மனிதன்தான் என்றும், தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வதாக தெரிவித்துள்ளார்‌. ‌செல்ஃபி விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ள அவர், பாதுகாவலர்களை ஓரம் தள்ளிவிட்டு நடக்கவே முடியாதபடி செல்ஃபி எடுப்பது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். உங்களை படம் பிடித்துக் கொள்கிறேன் என்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டு எடுத்திருக்கலாமே என்றும் அவர் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் நடிகர் சிவகுமார் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது பற்றி நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்ஃபி எடுக்கிறேன் என்று நடக்கக் கூட முடியாமல் செய்வது நியாயமா?

             

 தங்களை புகைப்படம் எடுக்கிறேன் என்று கேட்கமாட்டீர்களா? விஐபி என்றால் தான் சொல்லும்படி தான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? ஆயிரக்கணக்கான மக்களுடன் எத்தனையோ விழாக்களிலும், விமான நிலையங்களிலும் புகைப்படம் எடுத்துள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? நான் புத்தன் என்று என்னைச் சொல்லவில்லை. உங்களைப் போல் நானும் ஒரு மனிதன் தான். எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும், என்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்டு பின்பற்றுங்கள் என்று கூறவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் ஹீரோ தான். அதேபோல், அடுத்தவர்களை எந்தளவுக்கு துன்புறுத்துகிறோம் என்று நினைத்துப் பாருங்கள்” இவ்வாறு நடிகர் சிவகுமார் கூறினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close