[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

நவ.1 முதல் வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

monsoon-will-start-on-nov-1-chennai-met-announce

நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மையம் இயக்குநர் ஸ்டெல்லா, வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பருவமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். தென்மேற்கு வங்கக் கடலில், அதைனையொட்டிய பகுதிகளில் வளிமண்டன மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினார். 

வானிலை மைய தகவலின்படி, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை புதுச்சேரியில்‌ 16 சென்டிமீட்டர் மழையும் தமிழகத்தில் 12 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close