[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

அண்ணனை கொலை செய்த சிறுவனை நண்பர்களுடன் பழிவாங்கிய தம்பி..!

murder-in-chennai-koyambedu-for-revenge

கோயம்பேட்டில் அண்ணனை கொலை செய்த சிறுவனை பழிவாங்கிய தம்பி தனது நண்பர்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோயம்பேடு மேட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (17). மே மாதம் தனது காதலியை கிண்டல் செய்த கோயம்பேடு மேட்டுக்குளம் பாரதியார் தெருவை சேர்ந்த கணேஷ் (23) என்பவனின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே நின்றிருந்த விக்னேஷை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது.
இதில் படுகாயமடைந்த விக்னேஷ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், அண்ணனை கொலை செய்ததற்கு பழிவாங்க கணேஷின் தம்பி பிரகாஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து விக்னேஷை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து, கோயம்பேடு மேட்டுக்குளத்தை சேர்ந்த பிரகாஷ், மோகன், அஜித்,  மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்த ஆரோக்கியம், திருவேற்காட்டை சேர்ந்த சாரதி, ஆகிய 5 பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் இன்று அதிகாலையில் இறந்து போனார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close