[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

பொன்.மாணிக்கவேல் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரியவருக்கு நீதிமன்றம் கண்டனம்

chennai-high-court-condemned-ig-pon-manickvel-duty-extension-request-petitioner

ஐ.ஜி பொன்மாணிக்கவேலின் பதவிக்காலத்தை நீட்டிக்க கோரிய மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பழமையான கோயில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பாக ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதிரடி சோதனையில் பல்வேறு இடங்களில் ஏராளமான சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவர் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்கு தமிழக அரசு மறுப்புத் தெரிவித்தது. ஆனால் உயர்நீதிமன்றம் பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கலாம் என உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அவர் விசாரணையை தொடர்ந்து வருகிறார். 

இந்நிலையில், ஐ.ஜி பொன்மாணிக்கவேலின் பதவிக்காலத்தை நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மனுதாக்கல் செய்த சென்னையை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்போவதாகவும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு நிர்வாகத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என நீதிபதி மகாதேவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close