[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

ஆசிரியர் திட்டியதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை? 

the-school-student-has-committed-suicide-in-vellore

அரசு பள்ளி மாணவனை சக மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் திட்டியதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக என கூறப்படுகிறது.  

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் சுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் ராகேஷ். இவர் பச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ராகேஷின் வகுப்பு ஆசிரியர் ராமச்சந்திரன் நேற்று வழக்கம்போல் வகுப்பறை சென்றபோது மாணவன் ராகேஷ் வகுப்பறையில் இல்லை. இது குறித்து சக மாணவர்களிடம் கேட்டபோது அவர் வயிற்றுவலி காரணமாக வெளியில் சென்றுள்ளார் என்று மாணவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆசிரியர் ராமச்சந்திரன் அவருடைய தந்தை கணேசனுக்கு போன் செய்து பள்ளிக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகு அவரை அழைத்து மாணவன் ராகேஷ் அடிக்கடி வெளியில் செல்வதாகவும் பள்ளியில் ஒழுங்காக வருவது இல்லை என்று கூறியுள்ளார். 

இதனைதொடர்ந்து ராகேஷ் தனது வகுப்பறைக்கு வந்தபோது அங்கு கூடியிருந்த சக பள்ளி மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் ராமசந்திரன் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளி மாணவன் ராகேஷ் வீட்டிற்கு சென்று வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தகவல் அறிந்த பெற்றோர் உறவினர்களுக்கு பள்ளிக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது சடலத்தை இரவோடு இரவாக எரித்து விட்டனர்.   

இதனைதொடர்ந்து இன்று காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் தனது கூட படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்தனர். பின் ஆத்திரமடைந்து நாட்றம்பள்ளியிலிருந்து குப்பம் செல்லும் சாலையில் மாணவர்கள் மறியல் செய்ய முற்பட்டபோது தலைமை ஆசிரியர் அவர்களை சமாதானப்படுத்தி வகுப்பறைக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரனை நடத்தப்படும் எனக் கூறியதை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர். மாணவனை ஆசிரியர் சக மாணவர்கள் முன்னிலையில் திட்டியதால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close