[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

புதிய தலைமுறை செய்தி எதிரொலி : பெற்றோரை இழந்த மாணவிக்கு முதல்வர் உதவி

cm-edappadi-palanisamy-helps-erode-girl-student-for-puthiya-thalaimurai-news-reflection

ஈரோட்டில் பெற்றொரை இழந்ததால் தனது படிப்பை நிறுத்திவிட்டு கூலிவேலை செய்த பெண்ணின் படிப்புச்செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் காளிதிம்பம் கிராமத்தைச்சேர்ந்த சிவரஞ்சனி என்ற பெண்ணின் தாய், தந்தை மறைந்தனர். அவர்களின் மறைவுக்குப்பிறகு தனது சகோதரன் ஹரிபிரசாத்தை படிக்க வைப்பதற்காக தான் படித்து வந்த பிஏ படிப்பை நிறுத்திவிட்டு, சிவரஞ்சனி 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்துவந்தார். இதுகுறித்த செய்தி புதிய தலைமுறையில் ஒளிபரப்பானது. 

இதனைக் கண்டு, சிவரஞ்சனி தொடர்ந்து கோவை அரசு கலைக்கல்லூரியில் படிப்பதற்கும், அவரது சகோதரன் ஹரிபிரசாத் தாளவாடி உண்டு, உறைவிட பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இருவரும் தொடர்ந்து படிப்பதற்கு ஆகும் செலவை அரசே ஏற்கும் என்றும், அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

சிவரஞ்சனியை சந்தித்து இத்தகவலை தெரிவித்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமான 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை மாணவிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close