[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

தாய் கண் எதிரே பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொடூர கொலை !

the-13-years-old-school-girl-as-murdered-in-infront-of-her-mother-at-aathur

ஆத்தூர் அருகே தாயின் கண் முன்னே 13வயது சிறுமியை அரிவாளால் வெட்டி கழுத்தை அறுத்த இளைஞரை, அவரது மனைவியே காவல்துறையிடம் பிடித்து கொடுத்துள்ளார்.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சுந்தரபுரம் காட்டு கொட்டாயில் வசித்து வருபவர்கள் சாமுவேல்-சின்னப்பொன்னு தம்பதியினர். கூலித்தொழிலாளியான இவர்களுக்கு அருள்ஜோதி (21) மற்றும் ராஜலட்சுமி (14) ஆகிய மகள்கள் இருந்தனர். அருள்ஜோதிக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் மகள் ராஜலட்சுமி அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சின்னப்பொன்னு நேற்று இரவு தனது மகள் ராஜலட்சுமியுடன் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் சின்னப் பொன்னுவின் வீட்டிற்குள் நுழைந்து அவரை தாக்கினார். பின் அவர் கண் எதிரிலேயே அவரது மகள் ராஜலட்சுமியை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட ராஜலட்சுமியின் தலையை நடுரோட்டில் வைத்துவிட்டு, தினேஷ்குமார் தப்பிக்க முயன்றார். அப்போது தினேஷ்குமாரின் மனைவி சாரதா மற்றும் அவரது தம்பி ஆகியோர் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து  சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த ஆத்தூர் காவல்துறையினர், தலை வேறு உடல் வேறாக இருந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் தினேஷ்குமார் ஏன்? எதற்காக? சிறுமியை கொலை செய்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் ஆழ்ந்த சேகத்தில் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close