[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!

h-raja-appeared-chennai-high-court-today

நீதிமன்றம் குறித்து தவறாகப் பேசியதாக கூறப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார்.

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நீதிமன்றத்தையும், போலீசாரையும் அவமதித்து பேசியதாக ஹெச்.ராஜா மீது புதுக்கோட்டை, திருமயம் காவல் நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தை அவமதித்த ராஜாவை கைது செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.

நீதிமன்றத்தை இழிவாக பேசிய ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் ஹெச்.ராஜா மீது வழக்கு தொடராமல், தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. 

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி, நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து ஹெச். ராஜா மீதான வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹெச்.ராஜா அக்டோபர் 22-ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சி.டி. செல்வம், நிர்மல்குமார் அமர்வின் முன் ஹெச். ராஜா இன்று காலை ஆஜரானார். அவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.எஸ் தினகரன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அம்மனுவில் மேடை அமைத்துப் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உணர்ச்சிவயப்பட்ட காரணத்தால் தவறான வார்த்தைகளை உபயோகப்படுத்தி விட்டதாகவும், காணொலியில் பார்த்த பின்னரே தான் செய்த தவறு தெரியவந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தனது தவறுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஹெச் ராஜா மீதான அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக அறிவித்தனர். ஹெச் ராஜா நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close