[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

“பன்றிக்காய்ச்சலுக்கு விழிப்புணர்வு தேவை” - ஜே.பி.நட்டா வலியுறுத்தல்

union-health-min-jp-nadda-spoke-to-all-states-health-minister

பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கேட்டறிந்தார்.

கேரளாவில் பன்றிக்காய்ச்சல் காரணமாக அவ்வப்போது ஒரு சிலர் இறந்துவிடும் செய்திகள் வெளியாகி வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடகாவிலும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 177 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுவரை 5 பேர் அங்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

கர்நாடகா மட்டுமின்றி தெலுங்கானாவிலும் 50க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் பன்றிகாய்ச்சல் பாதிப்பு இருப்பதாக வெளியான தகவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. நெல்லை 4 பேரும், கோவையில் 2 பேரும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து அனைத்து மாநிலங்களுடனும் மத்திய சுகாரத்துறை அமைச்சர்  ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர்களிடம் அவர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அத்துடன் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக பேசியுள்ளார். 

பன்றிக்காய்ச்சல் தொடர்பாக அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக நாளை அனைத்து மாநில சுகாதாரச் செயலர்களுடனும் அவர் வீடியோ கால் மூலம் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close